கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி ஷர்மிளா, பாபு என்பவரிடம் இரண்டரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வட்டி செலுத்தாததால், பணத்தை திருப்பி கேட்டபோது கொடுக்காததால், ஷர்மிளா குடும்பத்தினர் திருமண வீட்டிற்கு சென்றிருந்தபோது, பாபு, அவரது தம்பி மணிகண்டன் மற்றும் சிலர் சேர்ந்து ஷர்மிளாவின் வீட்டை இடித்து சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














