மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி

0
211

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி இப்போது இந்தியிலும் நடித்து வருகிறார். ரன்வீர் கபூர், யாஷ் நடிக்கும் `ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்துள்ள அவர், ஆமிர்கான் மகன் ஜூனைத் கான் ஜோடியாக ‘மேரே ரஹோ’ என்ற படத்தையும் முடித்துள்ளார்.

இதில் ‘ராமாயணம்’ இவ்வருட தீபாவளிக்கும் ‘மேரே ரஹோ’ ஜூலை மாதமும் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் அவர் மணிரத்னம் இயக்கும் ரொமான்டிக் படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார்.

இதில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரிகிறது. முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மணிரத்னம், “நான் சாய் பல்லவியின் ரசிகன். அவருடைய இயல்பான நடிப்பு பிடிக்கும்” என்று கூறியிருந்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here