T20 WC 2026 சூப்பர் 8: இங்கிலாந்தின் சுழலில் இலங்கை அணி வீழ்ந்தது எப்படி?

0
25

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்பர் 8 சுற்​றில் நேற்று குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள முன்​னாள் சாம்​பியன்​களான இங்கிலாந்து – இலங்கை அணி​கள் மோதின. கண்​டி​யில் உள்ள பல்​லேகலே மைதானத்​தில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த இங்​கிலாந்து அணி தடு​மாறியது.

ஜாஸ்​பட்​லர் 7 ரன்​கள் எடுத்த நிலை​யில் துனித் வெல்லாலகே பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளை​யாட முயன்ற போது எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து களமிறங்​கிய ஜேக்​கப் பெத்​தேல் 3 ரன்​கள் எடுத்த நிலை​யில் தீக்​சனா பந்தை விளாச முயன்ற போது பேக்​வேர்டு பாயின்ட் திசை​யில் தில்​ஷான் மதுசங்காவிடம் கேட்ச் ஆனது. இதைத் தொடர்ந்து டாம் பேன்​டன் 3 ரன்​கள் எடுத்த நிலை​யில் தசன் ஷனகா​வின் அற்​புத​மான த்ரோ​வால் ரன் அவுட் ஆனார்.

இதன் பின்​னர் களம் புகுந்த கேப்​டன் ஹாரி புரூக் 14 ரன்களில் துனித் வெல்​லாலகே பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். சீரான இடைவெளி​யில் விக்​கெட்​கள் சரிந்த போதிலும் நிதான​மாக விளை​யாடிய தொடக்க வீர​ரான பில் சால்ட் 36 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் அரை சதம் கடந்​தார். சர்​வ​தேச டி 20 அரங்​கில் இது அவரது 8-வது அரை சதமாக அமைந்​தது.

ஆல் ரவுண்​ட​ரான சேம் கரண் 11 பந்​துகளில், 11 ரன்​கள் எடுத்த நிலை​யில் துஷ்மந்தா சமீரா வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்ற போது லாங் ஆன் திசை​யில் கமில் மிஷா​ரா​விடம் கேட்ச் ஆனது. 14-வது ஓவரில் இங்கிலாந்து அணி 100 ரன்​களை எட்​டியது. சீராக விளையாடி வந்த பில்​சால்ட் 40 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 62 ரன்​கள் எடுத்த நிலை​யில் துனித் வெல்​லாலகே பந்தை லாங் ஆஃப் திசை​யில் வலு​வின்றி அடித்த போது துஷான் ஹேமந்​தா​விடம் கேட்ச் ஆனது.

இதையடுத்து லியாம் டாவ்​சன் 6 ரன்​களில் தீக்​சனா பந்தில் நடையை கட்​டி​னார். இறு​திக்​கட்ட ஓவர்​களில் மட்டையை சுழற்​றிய வில் ஜேக்ஸ் 14 பந்​துகளில், 4 பவுண்டரி​களு​டன் 21 ரன்​கள் எடுத்த நிலை​யில் மதுசங்கா பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். தொடர்ந்து களமிறங்​கிய ஜோப்ரா ஆர்ச்​சர் ரன் ஏதும் எடுக்​காமல் நடையை கட்​டி​னார். ஜேமி ஓவர்​டன் 10 பந்​துகளில் 10 ரன்​களும், ஆதில் ரஷித் ஒரு ரன்னும் சேர்க்க 20 ஓவர்​களில் இங்​கிலாந்து அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 146 ரன்​கள் எடுத்​தது.

இலங்கை அணி சார்​பில் துனித் வெல்​லாலகே 3 விக்கெட்களை வீழ்த்​தி​னார். தில்​ஷான் மதுசங்​கா, தீக்சனா ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். துனித் வெல்​லால​கே, தீக்​ச​னா, துஷான் ஹேமந்தா ஆகியோர் கூட்​டாக 12 ஓவர்​களை வீசி 85 ரன்​களை வழங்கிய நிலை​யில் 5 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். பவர்​பிளே​வில் தில்​ஷான் மதுசங்கா 3 ஓவர்​களை வீசி 16 ரன்​களை மட்​டுமே வழங்​கி​னார். இதில் 17 பந்​துகளை அவர், ஃபுல் லெந்த்​தில் வீசி​யிருந்​தார்.

147 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இலங்கை அணியானது இங்​கிலாந்து அணி​யின் சுழற்​பந்து வீச்சை தாக்​குப்​பிடிக்க முடி​யாமல் 16.4 ஓவர்​களில் 95 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. தொடக்க வீரர்​களான பதும் நிசங்கா (9), கமல் மிஷாரா (6) ஆகியோரை ஜோப்ரா ஆர்ச்​சர் வெளி​யேற்​றி​னார்.

இதன் பின்​னர் வில் ஜேக்ஸ் தனது சுழற்​பந்து வீச்​சால் குஷால் மெண்​டிஸ் (4), பவன் ரத்​னாயகே (0), துனித் வெல்லாலகே (10) ஆகியோரை பெவிலியனுக்கு திருப்பினார். பவர்பிளேவில் இலங்கை அணி 34 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here