2-வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

0
25

இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி ஆஸ்திரேலியா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி இரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட டி20 கிரிக்​கெட் தொடரில் சிட்​னி​யில் நடை​பெற்ற முதல் போட்டி​யில் இந்திய மகளிர் அணி 21 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது.

இந்​நிலை​யில் 2-வது ஆட்​டம் நேற்று கான்​பெர்​ரா​வில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த ஆஸ்​திரேலிய மகளிர் அணி 20 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 163 ரன்​கள் குவித்தது. அதி​கபட்​ச​மாக தொடக்க வீராங்​க​னை​யான ஜார்​ஜியா வால் 57 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 11 பவுண்டரி​களு​டன் 88 ரன்​களும், பெத் மூனி 39 பந்​துகளில், 4 பவுண்டரி​களு​டன் 46 ரன்​களும் விளாசினர்.

இந்த ஜோடி முதல் விக்​கெட்​டுக்கு 14.5 ஓவர்​களில் 128 ரன்களை குவித்து அசத்​தி​யது. இந்​திய அணி தரப்​பில் அருந்​ததி ரெட்டி 2 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். 164 ரன்கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய மகளிர் அணி​யால் 20 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 144 ரன்​கள் மட்டுமே எடுக்க முடிந்​தது.

அதி​கபட்​ச​மாக கேப்​டன் ஹர்​மன்​பீரித் கவுர் 30 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 36 ரன்​கள் சேர்த்​தார். ஸ்மிருதி மந்தனா 31, ஷபாலி வர்மா 29, ரிச்சா கோஷ் 19, கிரந்தி கவுடு 12 ரன்​கள் சேர்த்​தனர்.

ஆஸ்​திரேலிய அணி சார்​பில் ஆஷ்லே கார்ட்​னர் 3 விக்கெட்களை வீழ்த்​தி​னார். கிம் கரேத், அனாபெல் சுதர்லேண்ட், சோஃபி மோலினக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்​களை வீழ்த்​தினர். 19 ரன்​கள் வித்​தி​யாசத் தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய அணி மகளிர் 3 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்​துள்​ளது. கடைசி மற்​றும் 3-வது போட்டி நாளை (21-ம் தேதி) அடிலெய்​டில்​ நடை​பெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here