இப்​ராஹிம் சத்​ரன் அதிரடி: 82 ரன்களில் கனடாவை வென்றது ஆப்கன் | T20 WC 2026

0
24

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் கனடா அணிக்​கெ​தி​ரான ஆட்டத்தில் ஆப்​கானிஸ்​தான் அணி 82 ரன்களில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்​டக்​காரர் இப்​ராஹிம் சத்​ரன் அதிரடி​யாக விளை​யாடி, 56 பந்துகளில் 95 ரன்​கள் குவித்தார்.

இந்த ஆட்டம் சென்னை சேப்​பாக்​கத்​தில் உள்ள எம்​.ஏ.சிதம்​பரம் கிரிக்கெட் மைதானத்​தில் நேற்று நடைபெற்றது. ‘டி’ பிரி​வில் இடம்பிடித்த ஆப்​கானிஸ்​தான், கனடா அணி​கள் இந்த லீக் ஆட்டத்தில் மோதின. இரு அணி​களுமே சூப்​பர் 8 சுற்றுக்கு முன்​னேறாத​தால் இது வெறும் சம்​பிர​தாய ஆட்​ட​மாக நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய ஆப்​கானிஸ்​தான் அணி 20 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 200 ரன்​கள் குவித்​தது.

தொடக்க ஆட்​டக்​காரர் இப்​ராஹிம் சத்​ரன் 56 பந்​துகளில் 7 பவுண்​டரி​கள், 5 சிக்​ஸர்​களு​டன் 95 ரன்​கள் குவித்து இறுதி வரை ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். மற்​றொரு தொடக்க ஆட்​டக்​காரர் ரஹ்​மானுல்லா குர்​பாஸ் 20 பந்​துகளில் 5 பவுண்​டரி​களு​டன் 30 ரன்​களை விளாசி​னார். குல்​ப​தீன் நயீப் 1, அஸ்​மத்​துல்லா ஒமர்​ஸாய் 13 ரன்​கள் சேர்த்து வீழ்ந்​தனர். கடைசி கட்ட ஓவர்​களில் அதிரடி​யாக விளை​யாடிய செடிகுல்லா அடல் 32 பந்​துகளில் 44 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தார்.

பின்​னர் 201 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்குடன் கனடா அணி விளை​யாடத்​ தொடங்​கியது. முஜீப் உர்-ரஹ்மான், முகமது நபி மற்றும் கேப்டன் ரஷீத் கான் என வலுவான சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, கனடா பேட்ஸ்மேன்களுக்கு களத்தில் கடும் சவால் கொடுத்தது.

சுழலில் மிரட்டிய நபி: ஆப்கானிஸ்தான் அணியின் அனுபவ ஆல்ரவுண்டரான முகமது நபி, 4 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த ரஷீத் கான், தனது 4 ஓவர் கோட்டாவில் 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முஜீப், 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.

20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது கனடா. இதன் மூலம் 82 ரன்களில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை இப்​ராஹிம் சத்​ரன் வென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here