நேற்று குளச்சல் துறைமுகம் அருகே உள்ள தூண்டில் வளைவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைபர் நாட்டு படகில் திடீரென தீப்பிடித்தது. நேரம் செல்ல செல்ல, மேலும் மூன்று நாட்டு படகுகளிலும் தீ பரவியது. குளச்சல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் இரண்டு பைபர் நாட்டு படகுகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. படகுகள் எப்படி தீப்பிடித்தன என்பது மர்மமாக உள்ளது. போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.














