சாஹிப்​சாதா ஃபர்​ஹான் சதம் விளாசல்: சூப்​பர் 8 சுற்​றில் நுழைந்தது பாகிஸ்தான்

0
18

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள எஸ்​எஸ்சி மைதானத்​தில் ‘ஏ’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் முன்​னாள் சாம்​பிய​னான பாகிஸ்தான், கத்​துக்​குட்​டி​யான நமீபி​யாவை எதிர்த்து விளை​யாடியது. இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றால் மட்​டுமே சூப்​பர் 8 சுற்​றுக்கு தகுதி பெற முடி​யும் என்ற சூழ்​நிலை​யில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 199 ரன்​கள் குவித்​தது.

தொடக்க வீர​ரான சாஹிப்​சாதா ஃபர்​ஹான் 58 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 11 பவுண்​டரி​களு​டன் 100 ரன்​கள் விளாசினார். சர்​வ​தேச டி 20 அரங்​கில் இது அவரது முதல் சதமாக அமைந்​தது. கேப்​டன் சல்​மான் அலி ஆகா 23 பந்துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 38 ரன்களும், ஷதப் கான் 22 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்டரியுடன் 36 ரன்​களும் சேர்த்​தனர்.

சைம் அயூப் 14, கவாஜா நஃபே 5 ரன்​கள் எடுத்​தனர். நமீபியா அணி தரப்​பில் ஜாக் பிரஸ்​ஸல் 2 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். 200 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நமீபியா 17.3 ஓவர்​களில் 97 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதிகபட்சமாக லோரன் ஸ்டீன்​காம்ப் 23, அலெக்​சாண்​டர் பஸ்​சிங்​-வோல்​ஷெங்க் 20 ரன்​கள் சேர்த்​தனர்.

மற்ற எந்த பேட்​ஸ்​மேன்​களும் இரட்டை இலக்க ரன்னை எட்​ட​வில்​லை. பாகிஸ்​தான் அணி தரப்​பில் உஸ்​மான் தாரிக் 3.3 ஓவர்​களை வீசி ஒரு மெய்​ட​னுடன் 16 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

ஷதப் கான் 3 விக்​கெட்​களை​யும் சல்​மான் மிர்​சா, முகமது நவாஷ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர். 102 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற பாகிஸ்​தான் அணிக்கு இது 3-வது வெற்​றி​யாக அமைந்​தது. லீக் சுற்​றின் முடி​வில் அந்த அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 6 புள்​ளி​களை பெற்று தனது பிரி​வில் 2-வது இடம் பிடித்து கடைசி அணி​யாக சூப்​பர் 8 சுற்​றுக்கு தகுதி பெற்​றது.

சூப்​பர் 8 சுற்​றில் பாகிஸ்​தான் அணி தனது முதல் ஆட்​டத்​தில் வரும் 21-ம் தேதி நியூஸிலாந்​துடன் மோதுகிறது. தொடர்ந்து 2-வது ஆட்​டத்​தில் 24-ம் தேதி இங்​கிலாந்​துட​னும், கடைசி ஆட்​டத்​தில் 28-ம் தேதி இலங்​கை​யுட​னு​ம் பாகிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

2-வது வீரர்

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் சாஹிப்சாதா ஃபர்ஹான் 100 ரன்கள் விளாசினார். இதன் மூலம் டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் சதம் விளாசிய 2-வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை சாஹிப்சாதா ஃபர்ஹான் பெற்றார். இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அகமது அகமது ஷெஹ்சாத் சதம் அடித்திருந்தார்.

பெரிய வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here