புதுக்கடை: வீட்டை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு

0
23

கீழ்குளம் பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் செல்வன்சனின் வீட்டில், அவரது மனைவி ஜேனட் புஷ்பலதா தனது மகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம், உண்டியலில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் மற்றும் 3000 ரூபாய் மதிப்புள்ள எட்டு கை கடிகாரங்கள் என மொத்தம் 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது. இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here