தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் லீக்: பிப்.25-ல் சென்னையில் தொடக்கம்

0
23

தமிழ்​நாடு கோல்ப் கூட்​டமைப்பு சார்​பில் டேப்​லெட்ஸ் இந்​தி​யா- தமிழ்​நாடு கோல்ப் பிரீமியர் லீக் சாம்பியன்​ஷிப் போட்டி வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி சென்னை நந்​தனத்​தில் உள்ள காஸ்​மோ​பாலிட்​டன் கிளப் கோல்ப் மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்த போட்டி கிளப் உறுப்​பினர்​களுக்​காக நடத்​தப்​படு​கிறது.

அம்​ருத் வாரியர்ஸ் கோல்ப், ஓபி எக்​ஸ்​பிரஸ், மெட்​ராஸ் ஈகிள்​ஸ், பென்​டகன் கோல்ப் அடிக்ட்​ஸ், சென்னை ஹஸ்ட்​லெர்​ஸ், பேர்வே அசாசின்​ஸ், மெட்​ராஸ் மாஸ்​டர்​ஸ், டீம் ஆல்​செக், 19 ஹோல் ஸ்மாஷர்​ஸ், ஆர்​.எஸ்​.எல், கிண்டி குண்​டாஸ், எக்​சிகியூட்​டிவ் ஈகிள்ஸ் ஆகிய 12 அணி​கள் இந்த போட்டி தொடரில் பங்​கேற்​கின்​றன.

ஒவ்​வொரு அணி​யிலும் 16 வீரர்​கள் இடம் பெறு​வார்​கள். 2 பேர் நேரடி​யாக தேர்வு செய்​யப்​படு​வார்​கள். 14 வீரர்​கள் ஏலம் முறை​யில் தேர்ந்​தெடுக்​கப்​படு​வார்​கள். அனைத்து வீரர்​களும் போட்​டி​யின் போது குறைந்​தது ஒரு தகு​திச் சுற்றில் பங்​கேற்க வேண்​டும்.

4 ரவுண்​டு​கள் முடி​வில் முதல் 4 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் சாம்​பியன் பட்​டத்​துக்​கான சுற்​றுக்​கு முன்னேறும். இந்த போட்டி தொடர்​பான அறி​முக நிகழ்ச்சி சென்னை நந்​தனத்​தில் உள்ள காஸ்​மோ​பாலிட்​டன் கோல்ப் கிளப்​பில் நேற்று நடை​பெற்​றது.

இதில் தமிழ்​நாடு கோல்ப் சங்க தலை​வர் கே.சி. ரகு​நாதன், போட்டி இயக்​குநர்​கள் ராமசுப்​பிரமணி​யன், ஏ. சந்திரசேகரன் கே. சுந்​தர், பாபு தண்​ட​பாணி மற்​றும் அணி உரிமை​யாளர்​கள் கலந்து கொண்​டனர். தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் லீக் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அறிமுக நிகழ்ச்சியில் தமிழ்நாடு கோல்ப் சங்க தலைவர் ரகுநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here