பார்முக்கு திரும்பும் முனைப்பில் அபிஷேக் சர்மா!

0
23

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் அகம​தா​பாத் நரேந்​திர மோடி மைதானத்​தில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பியனான இந்திய அணி, நெதர்லாந்துடன் மோதுகிறது.

சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணிக்கு இது கடைசி லீக் ஆட்​டம் ஆகும். இந்​திய அணி தனது முதல் 3 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்று ஏற்​கெனவே சூப்பர் 8 சுற்​றுக்கு தகுதி பெற்​று​விட்​டது. கடைசி​யாக பாகிஸ்​தான் அணியை 61 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் இந்​திய அணி தோற்​கடித்து இருந்​தது.

நெதர்​லாந்​துக்கு எதி​ரான இன்​றைய ஆட்​டத்தை இந்​திய அணி, சூப்​பர் 8 சுற்​றுக்​கான சிறந்த பயிற்சி ஆட்​ட​மாக பயன்​படுத்​திக் கொள்​ளக்​கூடும். தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா பார்​முக்கு திரும்​புவ​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். கடந்த 18 மாதங்​களாக சர்​வ​தேச டி 20 கிரிக்​கெட்​டில் தனது அதிரடி பேட்​டிங்​கால் ஆதிக்​கம் செலுத்தி வந்த அபிஷேக் சர்​மா, நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் எந்​த​வித தாக்​கத்​தை​யும் ஏற்படுத்தவில்​லை.

அவர், இன்​னும் ரன் கணக்கை தொடங்​கவே இல்​லை. அமெரிக்கா​வுக்கு எதி​ராக முதல் பந்​திலேயே ஆட்​ட​மிழந்த அபிஷேக் சர்​மா, உடல்​நலக்​குறைவு காரண​மாக நமீபியாவுக்கு எதி​ரான 2-வது ஆட்​டத்​தில் களமிறங்கவில்லை. மிக​வும் எதிர்​பார்க்​கப்​பட்ட பாகிஸ்தானுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 4 பந்​துகளை சந்தித்த அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்டமிழந்து ஏமாற்​றம் அளித்​தார்.

ஆனால் மறு​முனை​யில் இஷான் கிஷான் அபார​மான ஃபார்​மில் இருப்​ப​தால் அபிஷேக் சர்​மா​வின் மட்​டை​யில் இருந்து ரன்​கள் வெளிப்​ப​டாதது அணியை எந்தவிதத்திலும் பாதிக்​க​வில்​லை. அபிஷேக் சர்மா கடந்த 6 ஆட்​டங்​களில் 4-ல் ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்டமிழந்துள்ளார். இதனால் அவர், பவர்​பிளே​வில் தனது திட்​டங்​களில் மாற்​றங்​கள் செய்​யக்​கூடும்.

மற்ற பேட்​ஸ்​மேன்​களை போன்று அபிஷேக் சர்மா அதிக அளவில் வித்​தி​யாச​மான ஷாட்​களை மேற்கொள்வதில்லை. எதிரணியை மிரட்​டு​வதற்​காக கிரீஸின் பயன்​பாடு மற்​றும் மட்​டையை விரை​வாக சுழற்று​வதை பலமாக கொண்​டுள்​ளார்.

பவர்​பிளே​யில் டீப் கவர் திசை பவுண்​டரியை குறிவைப்​பதை அபிஷேக் சர்மா அதி​கம் விரும்​பக்​கூடிய​வர். இதை சரி​யாக கணித்து அமெரிக்க அணி அந்த பகு​தி​யில் ஒரு ஃபீல்​டரை நிறுத்தி அபிஷேக் சர்​மாவை ஆட்​ட​மிழக்​கச் செய்​தது.

பாகிஸ்​தான் அணி​யும் இதே​போன்று டீப் மிட்விக்​கெட் திசையை நோக்கி அடிக்​கும் வகை​யில் பந்தை வீசி அந்த இடத்​தில் பீல்​டரை நிற்​க​வைத்து அபிஷேக் சர்​மாவை வெளி​யேற்றி இருந்​தது. எனினும் இந்​திய அணி ஏற்​கெனவே அடுத்த சுற்​றுக்கு முன்​னேறி​விட்​ட​தால் எந்​த​வித அழுத்​த​மும் இல்​லாத​தால் இன்​றைய ஆட்​டத்​தில் அபிஷேக் சர்மா ரன்​கள் குவிப்​ப​தற்​கான முயற்​சி​யில் ஈடுபடக்​கூடும்.

இது ஒரு​புறம் இருக்க கடந்த 2 ஆட்​டங்​களி​லும் இந்​திய அணி​யில் இஷான் கிஷனை தவிர மற்ற பேட்​ஸ்​மேன்​கள் சுழற்​பந்து வீச்​சில் ரன்​கள் சேர்க்க தடு​மாறினர். நமீபியாவுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஜெரார்டு எராஸ்​மஸ் 20 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​யிருந்​தார். பாகிஸ்​தான் அணி​யில் உஸ்​மான் தாரிக் ரன் குவிப்பை கட்​டுப்​படுத்​தி​யிருந்​தார். மற்​றொரு சுழற்​பந்து வீச்​சாளரான சைம் அயூப் 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​யிருந்​தார்.

இதனால் இன்​றைய ஆட்​டத்​தில் இந்​திய அணி சுழற்​பந்து வீச்சை கையாள்​வ​தில் திட்​டங்​களை மாற்றி அமைக்​கக்​கூடும். நெதர்​லாந்து அணி 3 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 தோல்​வி, ஒரு வெற்​றி​யுடன் 4-வது இடத்​தில் உள்​ளது.

நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யா​வுக்கு சவால் கொடுக்க வேண்​டும் என்​றால் நெதர்​லாந்து பேட்​டிங், பந்​து​வீச்​சு என அனைத்​து துறை​யிலும்​ மேம்​பட்​ட திறனை வெளிப்​படுத்​த வேண்​டும்.

முன்​ன​தாக காலை 11 மணிக்கு டெல்​லி​யில் நடை​பெறும் ஆட்​டத்​தில் தென் ஆப்​பிரிக்கா – ஐக்​கிய அரபு அமீரகம் அணி​கள் மோதுகின்​றன. இதைத் தொடர்ந்து பிற்​பகல் 3 மணிக்கு கொழும்பு நகரில் உள்ள பிரேம​தாசா மைதானத்தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பாகிஸ்​தான் – நமீபியா அணி​கள் மோதுகின்​றன. இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றால் மட்​டுமே பாகிஸ்​தான் அணி சூப்​பர் 8 சுற்​றுக்கு தகுதி பெற முடி​யும்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here