சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் நினைவிடங்களை தகர்த்து வரும் சிஆர்பிஎப்

0
20

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்​குள் நாட்​டில் நக்​சல் தீவிர​வாதத்தை முற்​றி​லும் அகற்ற இலக்கு நிர்​ண​யித்​துள்​ளார். இதில் குறிப்​பிடத்​தக்க வெற்​றியை அரசு பெற்​றுள்​ளது.

கடந்த 2019-ல் சத்​தீஸ்​கர், ஜார்க்​கண்ட் உள்​ளிட்ட மாநிலங்​களில் 61 மாவட்​டங்​களில் நக்சலைட் வன்​முறை பதி​வானது. இது இந்த ஆண்டு ஜனவரி​யில் சத்​தீஸ்​கர் மற்​றும் ஜார்க்​கண்​டில் 5 மாவட்​டங்​களாக சுருங்​கி​யுள்​ளது.

சரண் அடை​யும் நக்சலைட்களுக்கான மறு​வாழ்வு கொள்​கை​யும் பலன் அளித்து வரு​வ​தால் நக்​சலிஸம் இல்​லாத நிலையை நோக்கி நாடு நகர்ந்து வரு​கிறது. இந்​நிலை​யில் நக்சலைட்களுக்கு எதி​ரான போரில் தற்​போது நக்சலைட் நினை​விடங்​களை சிஆர்​பிஎப் இடித்து அகற்றி வரு​கிறது.

இந்த நினை​விடங்​கள் பெரும்​பாலும் உயி​ரிழந்த நக்சலைட் தலை​வர்​கள் மற்​றும் கமாண்​டர்​களுக்​காக கட்​டப்​பட்​ட​வை. இதுகுறித்து சிஆர்​பிஎப் வட்​டாரங்​கள் கூறுகை​யில், “நக்​சல் எதிர்ப்பு நடவடிக்​கைகள் குறித்து ராய்ப்​பூரில் கடந்த பிப்​ர​வரி 8-ம் தேதி மத்​திய அமைச்​சர் அமித் ஷா மறு ஆய்வு செய்​தார்.

அப்​போது அவரது வழி​காட்​டு​தலுக்கு இணங்க சத்​தீஸ்​கரில் கடந்த 15 நாட்​களில் சுக்​மா, பிஜாப்​பூர் மற்​றும் பஸ்​தார் முழு​வதும் 53 நினை​விடங்​களை சிஆர்​பிஎப் இடித்து அகற்​றி​யுள்​ளது. உள்​ளூர் மக்​கள் உதவி​யுடன் பிப்​ர​வரி இறு​திக்​குள் அனைத்து நினை​விடங்​களை​யும் இடிக்க சிஆர்​பிஎப் இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது.

மக்​கள் மத்​தி​யில் அச்​சத்தை போக்கி நக்சல் போராட்​டத்​துக்​கான அடை​யாளத்தை அழிக்க இந்த நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது” என்​று தெரிவித்​தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here