வெட்டுவெந்நி புனித அந்தோனியார் ஆலய பாதிரியார் சகாய தாஸ் என்பவரது காரை நள்ளிரவில் 3 பேர் கொண்ட கும்பல் அடித்து உடைத்தது. பொதுமக்கள் துரத்தியதில் ஒருவர் தப்பி ஓடினார். 2 பேர் மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸிடமிருந்து தப்பியோட முயன்ற போது கீழே விழுந்து இருவரின் கைகள் முறிந்தன. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நவீன் (25), அனீஸ் குமார் (27) ஆகியோரே குற்றவாளிகள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.














