துருவ் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘பைசன்: காளமாடன்’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து எந்தவொரு புதிய படத்திலும் துருவ் விக்ரம் ஒப்பந்தமாகாமல் இருந்தார். தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
காதல் படமாக உருவாகும் இதனை இயக்கவுள்ளார் தீபக் ரெட்டி. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகிறது. இதில் நாயகிகளாக ருக்மணி வசந்த் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இதன் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரியவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
’பைசன்’ வெற்றிக்குப் பின்பு பல்வேறு கதைகள் கேட்டு வந்தார் துருவ் விக்ரம். ஆனால், தீபக் ரெட்டி கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே உடனே ஒப்பந்தமாகி இருக்கிறார். முன்னதாக இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘கில்’ தென்னிந்திய ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிப்பதாக இருந்தது. ஆனால், அதில் இருந்து துருவ் விக்ரம் விலகிவிட்டார்.














