ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

0
25

டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்​தார்.

டெல்​லி​யில் உள்ள பாரத் மண்​டபத்​தில் 5 நாள் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். பாரத் மண்​டபத்​தில் 600-க்​கும் மேற்​பட்ட அரங்​கு​கள் அமைக்​கப்​பட்டு உள்​ளன. இதில் முக்​கிய அரங்குகளை பிரதமர் மோடி பார்​வை​யிட்​டார். பல்​வேறு நிறுவனங்களின் ஏஐ நிபுணர்​களு​டன் அவர் கலந்​துரை​யாடி​னார்.

ஐ.நா.பொதுச்​செய​லா​ளர் அந்​தோணியோ குத்​தேரஸ் மற்​றும் பிரான்​ஸ், பிரேசில், சுவிட்​சர்​லாந்​து, கிரீஸ், பின்​லாந்​து, நெதர்லாந்து, கஜகஸ்​தான், ஸ்லோ​வாக்​கி​யா, எஸ்​டோனி​யா, ஐக்கிய அரபு அமீரகம், பொலி​வி​யா, மொரீஷியஸ், செஷல்​ஸ், கயானா உட்பட 20 நாடு​களின் தலை​வர்​கள், பல்​வேறு நாடு​களை சேர்ந்த 50 அமைச்​சர்​கள், உலகின் முன்​னணி நிறு​வனங்​களை சேர்ந்த 50 சிஇஓக்​கள் வெவ்​வேறு நாட்​களில் டெல்லி ஏஐ மாநாட்டில் பங்​கேற்க உள்​ளனர். சுமார் 840-க்​கும் மேற்​பட்ட நிறுவனங்​கள் மாநாட்​டில் பங்​கேற்று உள்​ளன.

பிரதமர் மோடி வரவேற்பு: பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: டெல்லி பாரத் மண்​டபத்​தில் திங்​கள் ​கிழமை தொடங்​கிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை இந்​தியா நடத்​துகிறது. இந்த மாநாட்​டில் பங்​கேற்​றுள்ள உலக நாடு​களை சேர்ந்த தலை​வர்​கள், தொழில்​துறை தலை​வர்​கள், புதுமை கண்​டு​பிடிப்​பாளர்​கள், கொள்கை வகுப்​பாளர்​கள், ஆராய்ச்​சி​யாளர்​கள், தொழில்​நுட்ப ஆர்​வலர்​களை வரவேற்​கிறேன். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மாநாடு குறித்து மத்​திய மின்​னணு துறை இணை​யமைச்​சர் ஜிதின் பிர​சாதா கூறும்​போது, “டெல்​லி​யில் ஏஐ உச்சி மாநாடு அல்ல, ஏஐ மகா கும்​பமேளா தொடங்கி உள்​ளது. பல்​வேறு நாடு​களின் தலை​வர்​கள், உலகம் முழு​வதும் இருந்து ஏஐ நிபுணர்​கள், ஏஐ ஆராய்ச்​சி​யாளர்​கள், முன்​னணி நிறு​வனங்​கள் மாநாட்​டில் பங்​கேற்று உள்​ளன” என்று தெரி​வித்​தார்.

யுபிஐ ஒரே உலகம்: உலகம் முழு​வதும் இருந்து சுமார் 5,000-க்​கும் மேற்​பட்ட வெளி​நாட்​டினர் டெல்லி ஏஐ உச்சி மாநாட்​டில் பங்கேற்று உள்​ளனர். அவர்​களின் பணப் பரி​மாற்​றத்​துக்​காக தேசிய பணப் பரி​மாற்​றக் கழகம் (என்​பிசிஐ) சார்​பில் “யுபிஐ ஒரே உலகம்” என்ற பெயரில் டிஜிட்​டல் பணப் பரி​மாற்ற சேவை தொடங்​கப்​பட்டு உள்​ளது. டெல்லி சர்​வ​தேச விமான நிலை​யம், பாரத் மண்​டபத்​தின் 14, 16 அரங்​கு​களில் “யுபிஐ ஒரே உலகம்” சேவையைப் பெற முடி​யும்.

இதன்​படி மாநாட்​டில் பங்​கேற்​றுள்ள வெளி​நாட்​டினர் ரூ.25,000-ஐ “யுபிஐ ஒரே உலகம்” வாலட்​டில் வரவு வைத்து இந்​தி​யா​வில் பொருட்​கள் வாங்க முடி​யும். யுபிஐ கியூஆர் கோடு நடை​முறை மூலம் டிஜிட்​டல் பணப் பரி​மாற்​றங்​களை மேற்​கொள்​ளலாம். தேவைப்​பட்​டால் கூடு​தலாக ரூ.25,000-ஐ வாலட்​டில் வரவு வைக்கலாம். ஆனால் ஒரு மாதத்​தில் அதி​கபட்​ச​மாக ரூ.50,000 வரை மட்​டுமே வாலட்​டில் வரவு வைக்க முடி​யும். இந்​தி​யா​வில் இருந்து சொந்த நாட்​டுக்கு திரும்​பும்​போது வெளி​நாட்​டினரின் வாலட்​டில் மீதமிருக்​கும் பணம் அவர்​களின் வெளி​நாட்டு வங்​கிக் கணக்​கு​களில் செலுத்​தப்​படும்.

இதுகுறித்து என்​பிசிஐ வட்​டாரங்​கள் கூறும்​போது, “இந்​தி​யா​வின் யுபிஐ பணப் பரி​மாற்ற நடை​முறைக்கு உலகம் முழு​வதும் பெரும் வரவேற்பு கிடைத்து வரு​கிறது. பிரான்​ஸ், ஐக்​கிய அரபு அமீரகம், கத்​தார், சிங்​கப்​பூர், நேபாளம், பூடான், மொரீஷியஸ், இலங்கை உள்​ளிட்ட நாடு​களில் யுபிஐ சேவை அறி​முகம் செய்​யப்​பட்டு உள்ளது. சைப்​ரஸ், மலேசியா உள்​ளிட்ட 30-க்​கும்​ மேற்​பட்​ட நாடுகள்​ யுபிஐ சேவையை விரை​வில்​ தொடங்​க உள்​ளன” என்​று தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here