அதிமுக இரட்டை இலை சின்னம் விவகாரம்: தாமதம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஐகோர்ட் கேள்வி

0
24

அ​தி​முக​வுக்கு இரட்டை இலை சின்​னம் வழங்​கியது, கட்​சி​யின் கொடி, பெயரை பயன்​படுத்​து​வது தொடர்​பாக வி. புகழேந்தி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்? என தேர்​தல் ஆணை​யத்​துக்கு டெல்லி உயர்​நீ​தி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

அதி​முக​வுக்கு இரட்டை இலை சின்​னம் வழங்​கியது, கட்​சி​யின் கொடி, பெயரை பயன்​படுத்​து​வது தொடர்​பாக வி. புகழேந்தி அளித்த புகார்​கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க டெல்லி உயர் நீதி​மன்​றம் கடந்த 2024ம் ஆண்டு இறு​தி​யில் உத்​தர​விட்​டது.

அதன் பிறகு புகார் மனு மீது நடவடிக்கை இல்லை என்று குறிப்பிட்டு தேர்​தல் ஆணை​யத்​துக்கு எதி​ராக புகழேந்தி தாக்​கல் செய்த நீதி​மன்ற அவம​திப்பு வழக்கை டெல்லி உயர்​நீ​தி​மன்ற நீதிபதி சச்​சின் தத்தா விசா​ரித்​தார். புகார் மீது இரண்டு ஆண்​டு​கள் கடந்து தேர்​தல் ஆணை​யம் நடவடிக்கை இல்​லை. தமிழ்​நாடு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் விரைவில் அறிவிக்​கப்​பட​வுள்​ளது. என அவரது வழக்​கறிஞர் திருமூர்த்தி வாதிட்​டார்.

அப்​போது தேர்​தல் ஆணை​யத்​திடம், புகார் மனு மீது செப்​டம்​பர் 14ம் தேதிக்கு பிறகு அழைத்து விசா​ரணை நடத்​தி​னார்​களா ? இன்னும் எவ்​வளவு காலம் ஆகும் ? எப்​போது விசா​ரித்து தீர்வு காணப்​படும் ? உயர்​நீ​தி​மன்ற உத்​தர​வுக்கு பிறகும் நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம் ? என நீதிபதி கேள்வி​களை எழுப்​பி​னார்.

எஸ்​ஐஆர் நடவடிக்​கைகள் இருப்​ப​தால், சரி​யான காலத்தை தெரிவிக்க முடி​யாது, இருப்​பினும், இந்த விவ​காரத்​தில் விளக்​கம் கேட்டு தெரிவிக்க அவகாசம் தேவை என தேர்​தல் ஆணை​யத்​தின் தரப்​பில் கோரிக்கை விடுக்​கப்​பட்​டது.

இதையேற்ற நீதிபதி , இரட்டை இலை சின்ன விவ​காரத்​தில் புகார் மீது எடுக்​கப்​பட்​டுள்ள நடவடிக்கை குறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணைய வழக்​கறிஞருக்கு அவகாசம் வழங்கி விசாரணை​யை பிப்​ர​வரி 23ம்​ தேதிக்​கு தள்​ளி வைத்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here