விருது பெற்ற கேரள விவசாயி கடன் சுமையால் தற்கொலை

0
27

கேரள மாநிலத்தில் விருது பெற்ற 62 வயது விவ​சாயி ஒரு​வர் கடன் சுமை காரண​மாக தற்​கொலை செய்து கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் கண்​ணூர் மாவட்​டம் செறு​புழா அருகே உள்ள இடவரத்​தைச் சேர்ந்​தவர் அம்​பாட்டு இலி​யாஸ் (62). விவசாயியான இவர் கடந்த 40 ஆண்​டு​களுக்கு மேலாக கண்​ணூர் மற்​றும் அண்டை மாவட்​ட​மான காசர்​கோடு மலைப்​ பகு​தி​களில் உள்ள நிலத்தை குத்​தகைக்கு எடுத்து காய்​கறி பயி​ரிட்டு வந்​தார்.

மேலும் மாநில அரசின் சிறந்த விவ​சாயிக்கான விருதை​யும் பெற்றுள்​ளார். இந்த பரு​வத்​தில் அவர் சுமார் 2,500 வாழைக்​கன்றுகளை நட்​டிருந்​தார். ஆனால், எதிர்​பார்த்த வரு​மானம் கிடைக்​காத​தால் அவர் மிகுந்த மன உளைச்​சலில் இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், மூன்று நாட்​களுக்கு முன்பு இலி​யாஸ் தனது பண்ணை​யில் பூச்​சிக்​கொல்லி மருந்​தைக் குடித்​து​விட்டு உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் கிடந்​துள்​ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மாவட்​டத்​தில் உள்ள ஒரு தனியார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​துள்​ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்​தார். பல லட்​சம் ரூபாய் கடன் சுமை காரண​மாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்​த​தாகக் சந்​தேகிக்​கப்​படு​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here