தேச விரோத செயலுக்கு பயன்படுத்தப்படும் 8,000 வங்கி கணக்கு முடக்கம்

0
22

காஷ்மீரில் கடந்த 3 ஆண்​டு​களில் சுமார் 8,000-க்​கும் மேற்பட்ட போலி வங்கி கணக்​கு​களை பாது​காப்பு முகமை​கள் கண்​டறிந்து முடக்​கி​யுள்​ளன. இந்த வங்கி கணக்​கு​கள் மூலம் திரட்டப்​படும் நிதி, பிரி​வினை​வாத மற்​றும் தேச விரோத நடவடிக்கைகளுக்​குப் பயன்​படுத்​தப்​படலாம் என்று அதி​காரி​கள் எச்​சரித்​துள்​ளனர்.

சர்​வ​தேச அளவில் நடை​பெறும் சைபர் குற்​றங்​களின் நிதி ஆதாரமாக இத்​தகைய கணக்​கு​கள் விளங்​கு​கின்​றன. திருடப்பட்ட பணத்​தை, யாரும் கண்​டு​பிடிக்க முடி​யாத வகை​யில் ‘கிரிப்​டோ கரன்​சி’களாக மாற்​று​வதற்கு இக்​கணக்​கு​களே முக்கியப் பால​மாகச் செயல்​படு​கின்​றன. இவை முடக்​கப்​பட்​டால் ஒட்​டுமொத்த சைபர் குற்​றச் சங்​கி​லி​யும் உடைக்​கப்​படும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

கடந்த 2017-ல் சட்​ட​விரோத பணப் பரி​மாற்​றங்​கள் மீது என்ஐஏ கடும் நடவடிக்கை எடுத்​தது. அதன் பிறகு, தேச விரோத சக்​தி​கள் தற்​போது டிஜிட்​டல் ஹவாலா முறைக்கு மாறி​யிருக்​கலாம் எனச்​ சந்​தேகிக்​கப்​படு​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here