எப்ஸ்டீன் விழாவில் கபில் சிபலுக்கு விருது வழங்கப்பட்டது: பாஜக செய்​தித் தொடர்​பாளர் குற்றச்சாட்டு

0
25

சிறுமிகள் மற்​றும் இளம்​பெண்​களை கடத்தி பணக்காரர்​களுக்கு போகப் பொருளாக விநி​யோகித்து வந்​தவர் அமெரிக்க தொழில​திபர் ஜெப்ரி எப்​ஸ்​டீன். இவர் 2019 ஜூலை மாதம் நியூயார்க் சிறை​யில் தற்​கொலை செய்​து​கொண்​டார்.

இந்நிலையில், அவர் சேகரித்து வைத்திருந்த லட்​சக்​கணக்​கான பக்​கங்​கள் கொண்ட ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவின்படி பகுதி பகு​தி​யாக வெளி​யிடப்​பட்டு வரு​கின்​றன. அதில், அதிபர் ட்ரம்ப், பில் கேட்​ஸ், எலான் மஸ்க், தொழில​திபர் அனில் அம்​பானி உள்ளிட்ட பலரின் பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ளன.

இந்​நிலை​யில் பாஜக செய்​தித் தொடர்​பாளர் பிரதீப் பண்​டாரி நேற்று தனது எக்ஸ் பக்​கத்​தில் கூறி​யுள்​ளதாவது: கடந்த 2010ம் ஆண்​டில் இன்​டர்​ நேஷனல் அவார்ட்ஸ் கேலா என்ற பெயரில் விழா நடந்தது. அதில் காங்​கிரஸ் மூத்த தலை​வரும், அப்​போது மத்திய அமைச்​ச​ராக​வும் இருந்த கபில் சிபலுக்கு விருது வழங்கப்பட்​டது. இந்த விருது வழங்​கும் விழாவுக்கு நிதி​யுதவி செய்​தவர் ஜெப்ரி எப்​ஸ்​டீன்.

அந்​தக் கால​கட்​டத்​துக்​குப் பிறகு, அப்​போதைய காங்​கிரஸ் தலைமையி​லான அரசில் பல கொள்கை மாற்​றங்​கள் காணப்பட்டன. இவை தற்​செய​லான நிகழ்​வு​களா அல்​லது எப்ஸ்டீனின் வெளிப்​புற செல்​வாக்கு காங்​கிரஸ் அரசின் முடிவு​களை வடிவ​மைக்க முயன்​ற​தா என்​ப​தற்கு மக்​களவை எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்​தி​ தான் பதிலளிக்க வேண்டும். ஏனெனில் கபில் சிபல், காந்தி குடும்​பத்​துக்கு நெருக்​க​மானவர். இவ்​வாறு அதில் கூறி​யுள்​ளார்.

இதுகுறித்து கபில் சிபல் கூறும்​போது, “பாஜக​வினர் என் மீது பொய் குற்​றச்​சாட்​டு​களைக் கூறி​யுள்​ளனர். இதில் எந்த உண்மையும் இல்​லை” என்​றார். 2022-ல் காங்​கிரஸில் இருந்து வெளி​யேறிய கபில் சிபல் தற்​போது மாநிலங்​களவை உறுப்பினராக சுயேச்​சை​யாக செயல்​பட்டு வரு​கிறார். அதே​ நேரத்​தில் சமாஜ்​ வாதி கட்​சி​யின் ஆதர​வில் அவர்​ செயல்படுகிறார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here