புதுக்கடை: 2 யூனிட் சல்லி பறிமுதல் – வழக்கு பதிவு

0
28

புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் முஞ்சிறை பஸ் நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான டிப்பர் வாகனம் ஒன்றை நிறுத்தியபோது, ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை சோதனையிட்டதில், 2 யூனிட் சல்லி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 6 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது. போலீசார் வாகனத்தையும், சல்லியையும் பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here