டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு எடுத்தது. பின்னர் அந்த முடிவை திரும்பப் பெற்றது. இதற்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாராட்டு தெரிவிப்பது போன்ற ஏஐ வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோவுக்கு சசி தரூர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் சசி தரூர் வெளியிட்டுள்ள பதிவில், “ஏஐ-யால் உருவாக்கப்படும் போலி செய்திகள் நல்லதல்ல. அந்த வீடியோவில் வருவது எனது மொழியுமல்ல; எனது குரலும் அல்ல” என்று கூறியுள்ளார்.











