பட்ஜெட் மீதான விவாதத்தில் நிர்மலா சீதாராமன் உரைக்கு பிரதமர் மோடி பாராட்டு

0
24

மக்​களவை​யில் பட்​ஜெட் மீதான விவாதத்​தில் மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பதில் உரையாற்றினார்.

அதைப் பாராட்டி எக்ஸ் தளத்​தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ”நாட்​டின் பொருளா​தார மாற்​றத்​துக்கு இந்தாண்டு பட்​ஜெட் எவ்​வாறு தனது பங்​களிப்பை அளிக்​கும் என்பதை மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் விரி​வாக விளக்​கி​னார்.

விரை​வான சீர்​திருத்​தங்​கள், குறு, சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​களுக்கு ஆதர​வு, திறன்​மேம்​பாடு, அடுத்த தலை​முறை கட்​டமைபுக்​கான நடவடிக்​கைகள், சுகா​தா​ரத்​துறை மேம்பாட்டுக்கான முயற்​சிகள், கல்வி மற்​றும் இதர துறை நடவடிக்​கைகளை அவர் எடுத்​துரைத்​தார். முதலீட்டு செல​வினம் ரூ.17.1 லட்​சம் கோடி​யாக உயர்ந்​துள்​ளது. இது மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் (ஜிடிபி) 4.4 சதவீதம் என்​றும் நிதி​யமைச்​சர் தெரிவித்துள்​ளார். இவ்வாறு பிரதமர்​ மோடி கூறி​யுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here