மாணவர்கள் தங்கள் ஆற்றலை வளர்க்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி அறிவுரை

0
21

ஏஐ போன்ற நவீன தொழில்​ நுட்​பங்​களை கண்டு அஞ்​சாமல் மாணவர்​கள் அவற்றை தங்​களின் அறி​வாற்​றலை பெருக்​கு​வதற்​காக பயன்​படுத்​திக்கொள்ள வேண்​டும் என மாணவர்​களுக்கு பிரதமர் மோடி அறி​வுரை வழங்​கி​னார்.

குஜ​ராத்​தின் தேவ​மொக்​ரா, தமிழகத்​தின் கோ​யம்​புத்​தூர், சத்தீஸ்கரின் ராய்ப்​பூர் மற்​றும் அசாமின் குவாஹாட்டி உள்​ளிட்ட நகரங்​களில் தேர்வு எழுதவுள்ள மாணவர்​களு​டன் பிரதமர் மோடி கலந்​துரை​யாடி​னார். அப்​போது அவர் கூறிய​தாவது: தலை​மைப் பண்பு என்​பது தேர்​தலில் போட்​டி​யிடு​வதோ அல்​லது அரசி​யல் கட்சி தொடங்​கு​வதோ அல்ல; மாறாக, தெளி​வான சிந்​தனை​யும், தகவல் தொடர்​பும் அத்​துடன் முதலில் தன் மீது தனக்கு இருக்​கும் நம்​பிக்​கை​யுமே ஒரு​வரைத் தலை​வ​ராக்​கும்.

தலை​வ​ராக உரு​வெடுக்க வேண்​டும் என்​றால் முதலில் உங்​களை நீங்​கள் நம்ப வேண்​டும். எதை​யும் முன்​னின்று நடத்​தும் மனப்​பாங்கை வளர்த்​துக் கொள்​ளுங்​கள். உங்​கள் கருத்​துக்​களை மற்றவர் மீது திணிக்​காமல், அவற்றை அவர்​களுக்​குத் தெளி​வாக எடுத்​துரைப்​பதே மிகச் சிறந்த தலை​மைப் பண்​பாக அமை​யும். தேர்வு பயத்​தைப் போக்க மாதிரி வினாத்​தாள்​களைத் தொடர்ந்து பயிற்சி செய்​யுங்​கள்.

அது உங்​களை பதற்​றமின்றி வைத்​திருக்​கும். அடுத்​த​தாக, ஆழ்ந்த உறக்​கம் மிக​வும் அவசி​யம். நல்ல உறக்​கம் புதிய சிந்தனைகளையும், தெளி​வான முடி​வெடுக்​கும் திறனை​யும் வழங்​கும். சாதனை​களை விட முதலில் ஒரு காரி​யத்​தைத் தொடங்​கு​வ​தில் உங்​கள் கவனம் இருக்​கட்​டும். செயற்கை நுண்ணறி​வு, செல்​போன் போன்ற நவீன தொழில்​ நுட்​பங்​கள் உங்களை ஆள ஒரு போதும் அனு​ம​திக்​காதீர்​கள்.

அது உங்​களுக்கு வேலை செய்​யும் கருவி​களாக மட்​டுமே இருக்கட்டும். அவை உங்​கள் எஜமானர்​களாக மாறி​விட அனுமதிக்​காதீர்​கள். தொழில்​நுட்​பத்​தைக் கண்டு அஞ்​சத் தேவையில்​லை. அதைக்​கொண்டு நமது அறி​வாற்​றலை வளர்த்துக் கொள்​ளவ​தில்​தான் நமது திறமை அடங்​கி​யுள்​ளது. வெற்​றிக்கு ஒழுக்​கம்​தான் அஸ்​தி​வாரம். எவ்​வளவு ​தான் உத்வேகம் இருந்​தா​லும், ஒழுக்​கம் இல்​லா​விட்​டால் எது​வும் பயனளிக்​காது.

விளை​யாட்​டை​யும் கல்​வியை​யும் சமமாகப் பாவி​யுங்​கள். விளிம்பு நிலை மக்​களின் கல்வி வளர்ச்​சியை மேம்​படுத்த ‘பிஎம்-ஜன்​மன்’ போன்ற திட்​டங்​களுக்கு மத்​திய அரசு முன்​னுரிமை அளித்து செயல்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு மாணவர்​களிடம்​ பிரதமர்​ மோடி உரை​யாடி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here