தூத்துக்குடி திமுக எம்.பி.கனிமொழி மக்களவையில் எழுப்பிய ஒரு கேள்விக்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதில் அளித்துள்ளார்.
அதில், “2021- 2026ம் ஆண்டு காலகட்டத்தில் தொல்லியல் அகழாய்வுக்காக மத்திய அரசின் ஒப்புதலை பெறுவதற்காக தமிழ்நாடு தொல்லியல் துறை மொத்தம் 45 பரிந்துரைகளை அனுப்பியது. 2021ல் 12, 2022ல் 8, 2023ல் 3, 2024ல் 10, 2025ல் 12 என 45 பரிந்துரைகள் வந்தன. இதில் 2025ல் வந்த 12 திட்டங்களில் 8 பரிசீலனையில் உள்ளன. மற்ற அனைத்து பரிந்துரைகளும் ஏற்கப்பட்டன” என்று கூறியுள்ளார்.



