டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் பாதித்தோருக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

0
20

டிஜிட்​டல் அரெஸ்ட் மோசடி தொடர்​பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிப​தி​கள் ஜாய்​மால்ய பாக்​சி, அன்​ஜாரியா அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மத்​திய அரசு சார்​பில் அட்​டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜரா​னார். அவர் கூறும்​போது, “டிஜிட்​டல் அரெஸ்ட் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி வரைவு கொள்​கையை தயாரித்து உள்​ளது. இதுதொடர்​பாக தொடர்ந்து ஆலோசனை நடத்​தப்​பட்டு வரு​கிறது” என்றார்.

இந்த வழக்​கில் உதவ உச்ச நீதி​மன்​றத்​தால் நியமிக்​கப்​பட்ட மூத்த வழக்​கறிஞர் நப்​பினை கூறும்​போது, “சந்​தேகத்​துக்​குரிய வங்கி பணப் பரி​மாற்​றங்​களை கண்​காணிக்க செயற்கை நுண்​ணறிவு தொழில் ​நுட்​பத்தை பயன்​படுத்த வேண்​டும்” என்று ஆலோ​சனை வழங்​கி​னார்.

இறு​தி​யில் தலைமை நீதிபதி அமர்வு முக்​கிய உத்​தரவை பிறப்பித்தது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2021 ஏப்​ரல் முதல் 2025 நவம்​பர் வரை நாடு முழு​வதும் டிஜிட்​டல் அரெஸ்ட் மோசடியால் அப்​பாவி பொது​மக்​கள் ரூ.54,000 கோடியை இழந்துள்​ளனர். இது மிகப்​பெரிய கொள்ளை ஆகும். இந்த தொகை பல்​வேறு மாநிலங்​களின் பட்​ஜெட்​டுக்கு இணை​யாக உள்ளது.

பெரும்​பாலான டிஜிட்​டல் அரெஸ்ட் மோசடிகளுக்கு வங்கி அதி​காரி​களின் அலட்​சிய போக்​கும் முக்​கிய காரண​மாக அமைந்துள்ளது. பொது​மக்​களின் பணத்​துக்கு வங்​கி​களே பாதுகாவலர்​கள். வங்​கி​களை நம்​பியே பொது​மக்​கள் தங்​கள் பணத்தை முதலீடு செய்​கின்​றனர்.

பொது​வாக ஓய்வு பெற்ற ஊழியர்​கள் ஒரு மாதத்​தில் சுமார் ரூ.20,000 மட்​டுமே பணத்தை எடுப்​பது வழக்​க​மாக உள்​ளது. ஆனால் அவரது வங்​கிக் கணக்​கில் ஒரே நேரத்​தில் ரூ.25 லட்​சம் முதல் ரூ.50 லட்​சம் வரை பணம் எடுக்​கப்​படு​வதை வங்கி நிர்வாகங்​கள் கவனிக்க வேண்​டியது அவசி​யம். இது​போன்ற சந்தேகத்​துக்​குரிய பணப் பரி​மாற்​றங்​கள் குறித்து சம்பந்தப்பட்டவர்​களுக்கு வங்கி அதி​காரி​கள் எச்​சரிக்கை தகவல்களை அனுப்ப வேண்​டும்.

டிஜிட்​டல் அரெஸ்ட் மோசடி​யால் பாதிக்​கப்​படு​வோருக்கு உரிய இழப்​பீடு வழங்​கப்பட வேண்​டும். இதுதொடர்​பாக மத்​திய உள்துறை அமைச்​சகம் சார்பில், ரிசர்வ் வங்​கி, தொலைத்​தொடர்பு அமைச்​சகத்​துடன் ஆலோ​சிக்க வேண்​டும். இதன் அடிப்படையில் அடுத்த 4 வாரங்​களுக்​குள் வழி​காட்டு நெறிகளை வரையறுக்க வேண்​டும். இவ்​வாறு தலைமை நீதிபதி அமர்வு உத்தர​விட்​டது.

இந்த வழக்கு ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது, டிஜிட்​டல் அரெஸ்ட் மோசடி தொடர்​பான அனைத்து வழக்​கு​களை​யும் சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இதற்கு ஒப்புதல் வழங்​கு​மாறு டெல்​லி, குஜ​ராத் அரசுகளுக்​கும் உச்ச நீதிமன்​றம் அறி​வுறுத்​தி​யது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here