‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி

0
24

அதர்வா முரளி இரட்டை வேடங்​களில் நடிக்​கும் படத்​துக்கு ‘வலை’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதை ஜீவா சங்​கர் ஒளிப்​ப​திவு செய்து இயக்​கி​யுள்​ளார். இவர், ‘நான்’, ‘அமர காவி​யம்’ போன்ற படங்​களை இயக்​கிய​வர்.

ரூபா மஞ்​சரி, வாணி போஜன், முரளி சர்​மா, ஆடு​களம் நரேன், அர்​ஜாய் உள்பட பலர் நடித்​துள்​ளனர். ராது இன்ஃ​போ டெ​யின்​மென்ட் சார்​பில் பெப்சி வி.எஸ்​.​பால​முரளி தயாரித்​துள்ள இப்​படத்​துக்கு ஜிப்​ரான் இசை அமைத்​துள்​ளார்.

படம் பற்றி ஜீவா சங்​கர் கூறும்​போது, “ராமேஸ்​வரம் பின்னணியில் இப்​படம் உரு​வாகியுள்​ளது. சரா மற்​றும் குட்டி என 2 கதா​பாத்​திரங்​களைச் சுற்றி இப்​படத்​தின் கதை நகர்​கிறது. அந்த 2 கதா​பாத்​திரங்​களி​லும் அதர்வா முரளி நடித்​துள்​ளார். மீனவர் சமூகத்​தின் வாழ்க்​கையை பேசும் இப்​படம், பழி​வாங்​கும் கதை​யாக உரு​வாக்​கப் பட்​டுள்​ளது. படப்​பிடிப்பு முடிந்​து, போஸ்ட் புரொடக் ஷன் பணி​கள் இறு​திக் ​கட்​டத்தை எட்​டி​யுள்​ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here