கர்நாடகாவில் பயிற்சி விமானம் விபத்து: பைலட் உட்பட 2 பேர் காயம்

0
22

கர்நாடக மாநிலத்தில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த பைலட் உட்பட இரண்டு பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

கர்நாடகாவின் கலபுர்கி பகுதியில் இருந்து தனியார் பயிற்சி விமானம் ஒன்று பெலகாவி நோக்கி நேற்று புறப்பட்டது. நடுவானில் அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயிற்சி விமானத்தை விஜயப்புரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வயலில் தரை இறக்க பைலட் முயன்றார்.

அந்த விமானம் தரையில் மோதி 3 துண்டாக உடைந்தது. அதில் பயணம் செய்த பைலட் உட்பட இருவரும் காயத்துடன் தப்பினர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். விமான விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here