“பாகிஸ்தானின் முடிவு என் கட்டுப்பாட்டில் இல்லை” – சூர்யகுமார்

0
19

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் நாளை (7-ம் தேதி) இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​கு​கிறது. இதில் நடப்பு சாம்​பியனான இந்​தியா உள்​ளிட்ட 20 அணிகள் கலந்து கொள்​கின்​றன.

இந்​தத் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்​திய அணி இதே பிரி​வில் இடம் பெற்​றுள்ள பாகிஸ்​தானும் வரும் 15-ம் தேதி லீக் சுற்​றில் மோதும் வகை​யில் அட்​ட​வணை உள்​ளது. ஆனால் இந்த போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி களமிறங்​காது என அந்​நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்​நிலை​யில் டி 20 உலகக் கோப்​பை​யில் பங்​கேற்​கும் அனைத்து அணி​களின் கேப்​டன்​கள் பங்​கேற்ற நிகழ்ச்சி மும்​பை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற இந்​திய அணி​யின் கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் கூறிய​தாவது:

இந்​தியா – பாகிஸ்​தான் போட்டி தொடர்​பான நிலைமை எளி​தான காரி​யம் அல்ல என்று நான் நினைக்​கிறேன். இது என் கையில் இல்​லை. ஐசிசி ஏதேனும் ஒரு தீர்வை யோசித்​துக்​கொண்​டிருக்​கும் என்று நான் உறு​தி​யாக நம்​பு​கிறேன். ஆனால் இது மற்​றொரு அரசாங்​கத்​திடம் இருந்தோ அல்​லது நாட்​டிலிருந்தோ வந்​திருக்​கிறது.

இந்த நிலை​யில் ஐசிசி எப்​படி உதவ முடி​யும்? பாகிஸ்​தானின் முடிவு என் கட்​டுப்​பாட்​டில் இல்​லை. அவர்​களது முடிவு​களை என்​னால் எடுக்க முடிந்​தால் நன்​றாக இருக்​ கும். பிப்​ர​வரி 15-ம் தேதி கொழும்பு நகரில் நடைபெற உள்ள போட்​டி​யில் விளை​யாட வேண்​டும் என்று எங்​களிடம் கூறப்​பட்​டுள்​ளது.

ஆசி​யக் கோப்​பை​யில் நாங்​கள் பாகிஸ்​தான் அணியை 3 முறை எதிர்​கொண்​டோம். அவற்​றில் நாங்கள் சிறப்​பாக விளை​யாடினோம். அனைத்​துப் போட்​டிகளிலும் வெற்றி பெற்​றோம். அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்​சியை அளித்​தது. கொழும்​பில் எங்​களுக்கு வாய்ப்பு கிடைத்​தால், நாங்கள் விளை​யாடு​வோம்.

எங்​கள் நிலைப்​பாடு தெளி​வாக உள்​ளது. நாங்​கள் பாகிஸ்தானுக்கு எதி​ராக விளை​யாட மறுப்பு தெரிவிக்​க​வில்​லை. அவர்​கள்​தான் மறுப்பு தெரி​வித்​துள்​ளனர். ஐசிசி போட்டி அட்​டவணையை வெளி​யிட்​டு​விட்​டது. எங்​கள்விமான டிக்​கெட்​டு​கள் முன்​ப​திவு செய்​யப்​பட்​டு​விட்​டன, நாங்​கள் கொழும்​புக்கு செல்​கிறோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here