தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் ஒன்றில் நேற்று (பிப்ரவரி 5) திடீரென தீப்பிடித்தது. குழித்துறை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஏராளமான அட்டைப் பெட்டிகளும், தெர்மாகோல் பெட்டிகளும் எரிந்து நாசமாயின. இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














