கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட காக்கவிளையிலிருந்து காட்டுக்கடை செல்லும் கிளை கால்வாய் குறுக்கே பழுதடைந்திருந்த சிறு நடைபாதை பாலம், பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் ரூ 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சீரமைக்கப்பட்டு, நேற்று எம்எல்ஏ ராஜேஷ்குமார் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.














