19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கினார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே, நமீபியா நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் சூப்பர் சிக்ஸ் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி எளிதாக உலகக் கோப்பையின் அரை இறுதிக்கு முன்னேறும். எனவே, இரு அணிகளுக்கும் இது முக்கியமான ஆட்டமாக உள்ளது.
இந்நிலையில், ஜிம்பாப்வேயில் உள்ள இந்திய வீரர்களுக்கு சில அறிவுரைகளை சச்சின் டெண்டுல்கர் நேற்று வழங்கினார். காணொலி முறையில் ஜிம்பாப்வேயில் உள்ள இந்திய வீரர்களுடன் சச்சின் டெண்டுல்கர் உரையாடினார். இதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செய்திருந்தது. அப்போது சில பேட்டிங் நுணுக்கங்களையும் சச்சின் இந்திய வீரர்களுக்கு வழங்கினார்.



