பாகிஸ்தானை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா: யு19 உலகக் கோப்பை கிரிக்கெட்

0
39

19 வயதுக்​குட்​பட்​டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்​பர் சிக்​ஸ் ஆட்டத்தில் பாகிஸ்தானை 58 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி. இதன் மூலம் இந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி.

இந்த தொடர் நமீபி​யா, ஜிம்​பாப்வே ஆகிய நாடு​களில் நடை​பெற்று வரு​கின்​றன. இதன் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணிகள் பந்து வீச முடிவு செய்தது.

இந்திய அணி முதலில் பேட் செய்து 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது. வேதாந்த் திரிவேதி 98 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். கனிஷ்க் சவுகான் 35, வைபவ் சூர்யவன்ஷி 30, ஆர்எஸ் அம்ப்ரிஷ் 29 ரன்கள் எடுத்தனர்.

253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது. 2 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான் அணி. அதன் பின்னர் பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. மேற்கொண்டு 43 ரன்கள் சேர்ப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி. அந்த அணி 46.2 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா வெற்றி பெற்றது. வரும் 3-ம் தேதி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மற்றும் 4-ம் தேதி இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதியில் விளையாடுகின்றன. இந்த தொடரின் இறுதிப் போட்டி வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here