2026-27ம் நிதியாண்டில் தலைமை தேர்தல் ஆணையத்துக்காக ரூ.382.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025-26-ல் ஒதுக்கப்பட்டதை விட 25% அதிகம். இதில் ரூ.367.69 கோடி நிதி, தேர்தல் தொடர்பான செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள நிதி, நிர்வாக மற்றும் செயல்பாட்டுச் செல வினங்களுக்காக செலவிடப்படும். மேலும், வாக்காளர் அடையாள அட்டை தயாரிப்பதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.



