வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி வினிஷ் (23) கடந்த 24ஆம் தேதி கோயில் கும்பாபிஷேக விழாவிற்குச் சென்று வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை விஷ்ணு வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வினிஷை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.














