இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளும் ஊழியர்களுக்கு ரூ.12.5 லட்சம் பரிசு: துபாய் தொழிலதிபர் அறிவிப்பு

0
49

து​பாயைச் சேர்ந்த தொழில​திபர் கலாப் அல் ஹப்​தூர், ஊழியர்​களுக்கு திருமண பரிசாக ரூ.12.5 லட்​சம் வழங்​கப்​படும் என்று அறி​வித்​துள்​ளார்.

ஐக்​கிய அரபு அமீரகத்​தைச் சேர்ந்த அல் ஹப்​தூர் குழு​மத்​தின் தலை​வர் கலாப் அல் ஹப்​தூர் எக்ஸ் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: திரு​மணம் செய்​வதும், ஒரு குடும்​பத்தை உரு​வாக்​கு​வதும் வெறும் தனிப்​பட்ட விஷ​யம் மட்​டுமல்ல. அவை சமூக மற்​றும் தேசிய பொறுப்​பு​கள். ஏனெனில் குடும்​பங்​களின் மூலமே தேசங்​கள் கட்​டி​யெழுப்​பப்​படு​கின்றன மற்​றும் சமூகங்​கள் நிலைத்​திருக்​கின்​றன.

எங்​கள் அரசு குடும்ப வாழ்க்​கையை தொடங்​கும் இளைஞர்​களுக்கு ஆதர​வளிக்​கத் தவறு​வ​தில்​லை. ஆனால் ஐக்​கிய அரபு அமீரக குடிமக்​கள் திரு​மணம் செய்து குடும்​பத்தை உரு​வாக்​கு​வதற்கு அனை​வரிட​மிருந்​தும் நடை​முறை முயற்​சிகள் தேவைப்​படு​கின்​றன.

அந்த அடிப்​படை​யில், இந்த ஆண்டு திரு​மணம் செய்​து​கொள்​ளும் அல் ஹப்​தூர் குழு​மத்​தில் பணிபுரி​யும் ஒவ்​வொரு எமி​ராட்டி (ஐக்​கிய அரபு அமீரகத்​தைச் சேர்ந்​தவர்) இளைஞர் அல்​லது பெண்​ணுக்​கும் 50,000 திர்​ஹாம் (ரூ.12.5 லட்​சம்) வழங்​கப்​படும் என நான் உறு​தி​யளிக்​கிறேன்.

குடும்​பங்​களே சமூகத்​தின் அஸ்​தி​வாரம். குழந்​தைகள் தேசத்​தின் எதிர்​காலத்​துக்​கான முதலீடு. ஓர் வலு​வான குடும்​பம் ஒரு ஒத்​திசை​வான சமூகத்​தை​யும் வலு​வான தேசத்​தை​யும் உரு​வாக்​கு​கிறது. நிதி​யுதவி பெற்று திரு​மணம் செய்​து​கொண்ட பிறகு, ஒரு குழந்தை பிறந்த இரண்டு ஆண்​டு​களுக்​குள் இந்த நிதி உதவி இரட்​டிப்​பாக்​கப்​படும். இவ்​வாறு அதில் கூறி​யுள்​ளார்.

கலாப் அல் ஹப்​தூர் யார்? – கலாப் அகமது அல் ஹப்​தூர், ஐக்​கிய அரபு அமீரகத்​தின் முன்​னணி தொழில​திபர் மற்​றும் அல் ஹப்​தூர் குழு​மத்​தின் தலை​வர் ஆவார். இவர் கமர்​ஷியல் பேங்க் ஆஃப் துபாய் தலை​வ​ராக​வும், அமீரகத்​தின் பெடரல் நேஷனல் கவுன்​சில் உறுப்​பின​ராக​வும் பணி​யாற்​றி​யுள்​ளார். 1970-ல் தொடங்​கப்​பட்ட அல் ஹப்​தூர் குழு​மம், விருந்​தோம்​பல், வாக​னத்​துறை, ரியல் எஸ்​டேட், கல்வி, பதிப்​பகம் என பல்​வேறு துறை​களில்​ செயல்​பட்​டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here