‘ப்ராமிஸ்’ பாடல் வெளி​யீடு

0
62

அருண்​கு​மார் சேகரன் இயக்​கி, ஹீரோ​வாக நடித்​துள்ள படம், ‘ப்ராமிஸ்’. நாயகி​யாக நதியா நடித்​துள்​ளார். சரவணதீபன் இசை அமைத்​துள்​ளார். சங்​க மித்​ரன் புரொடக் ஷன், அம்​மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்​துள்ள இப்​படத்​தின் டிரெய்​லர் மற்​றும் பாடல்​கள் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

படக்​குழுவினருடன் இயக்​குநர் பேரரசு, தயாரிப்​பாள​ரும் விநியோகஸ்​தர் சங்​கத் தலை​வரு​மான கே.ராஜன், கில்டு தலை​வர் ஜாக்​கு​வார் தங்​கம் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தயாரிப்​பாளர் என்​.​நாக​ராஜன் வரவேற்​றார்.

கே.ராஜன் பேசும்​போது, “தமிழ் சினி​மா​வில் பழிவாங்குவதற்கு என்றே சில விஷ​யங்​கள் நடக்​கின்​றன. ‘ஜனநாயகன்’ படத்தின் கதா​நாயகன் சாதா​ரண​மாக நடித்து இருந்​தால், இந்​தப் பிரச்​சினை வந்​திருக்​காது. அவர் அரசி​யல் கட்சி ஆரம்​பித்​து, நான் தான் தமிழ்​நாட்​டின் முதல்​வர் ஆவேன் என்று அடம் பிடித்​தார் அல்​ல​வா? அதில் பிடித்​தது பிரச்​சினை. எந்த அரசாக இருந்​தா​லும் ஜனநாயக​னின் பிரச்​சினையை முடித்து தயாரிப்​பாளர் காப்​பாற்​றப்பட வேண்​டும். உங்​கள் அரசி​யலுக்​காக சினிமாவைப் பழி வாங்​காதீர்​கள்​” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here