குஜராத் மாநிலம், சூரத் நகரின் தட்கேஷ்வர் பகுதியில் 11 மீட்டர் உயரத்தில் 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
14 கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.21 கோடி செலவில் இது கட்டப்பட்டது. இந்நிலையில் திறக்கப்படுவதற்கு முன் சோதனை முயற்சியாக, அண்மையில் இதில் சுமார் 9 லட்சம் லிட்டர் குடிநீர் நிரப்பப்பட்டது. அப்போது குடிநீர் தொட்டி இடிந்து விழுந்தது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள், 2 அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.



