விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: 2 பேர் உயிர் தப்பினர்

0
57

இந்​திய விமானப்​படை​யின் இலகு ரக பயிற்சி விமானம் ஒன்று உத்தர பிரதேசம் பிர​யாக்​ராஜ் பகு​தி​யில் நேற்று வழக்​க​மான பயிற்​சி​யில் ஈடு​பட்​டது. அதில் 2 விமானிகள் பயணம் செய்​தனர். இது பொது​வாக பயிற்சி மற்​றும் கண்​காணிப்பு பணிக்கு பயன்​படுத்​தப்​படும்.

சங்​கமம் பகு​தி​யில் இந்த விமானம் நேற்று பறந்து கொண்​டிருந்​த​போது, அதில் திடீரென தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்​டது. இதையடுத்து ஜார்ஜ் டவுன் பகு​தி​யில் உள்ள கே.பி. கல்​லூரி அருகே உள்ள குளத்​தில் பயிற்சி விமானம் பாது​காப்​பாக தரை​யிறக்​கப்​பட்​டது. அதில் பயணம் செய்த 2 விமானிகளும், போலீ​ஸார், தீயணைப்பு படை​யினர் மற்​றும் பொது​மக்​கள் உதவி​யுடன் பாது​காப்​பாக மீட்​கப்​பட்​டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here