நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில், மாணவ மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 42 லட்சம் ரூபாய் செலவில் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உடற்பயிற்சி கருவிகள், பழு தூக்கும் கருவிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று (ஜனவரி 10) திறந்து வைத்தார். பின்னர், அமைச்சர் மனோ தங்கராஜ் சுமார் 90 கிலோ எடையை தூக்கி (BENCH PRESS) பயிற்சியில் ஈடுபட்டு மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.











