கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த நளினாக்க்ஷன் (41) என்பவர் குடும்பப் பிரச்சனை காரணமாக நேற்று முன்தினம் மனைவியின் புகாரில் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார். இரவில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், நளினாக்க்ஷன் கையை பிளேடாவால் அறுத்துக்கொண்டு, மின்விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














