குளச்சல்: ஆலயப்பணி சம்மந்தமாக மோதல்; 14 பேர் மீது வழக்கு

0
178

குளச்சல் அருகே வடக்கு கல்லுகூட்டத்தில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆலய கட்டுமானப் பணியை பன்னீர் கிங்ஸ்லி என்பவர் கடந்த 14ஆம் தேதி கேட்டபோது, ஜெரால்டு தலைமையிலான 14 பேர் கும்பல் அவரைத் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளது. காயமடைந்த அவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக குளச்சல் போலீசார் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here