நித்திரவிளை அருகே மங்காடு – விரிவுலை சாலை மற்றும் முஞ்சிறை – கோழிவிளை சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை சீரமைக்க வலியுறுத்தி, விரிவிளை சந்திப்பில் நேற்று (9ஆம் தேதி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. மெதுகுமல் வட்டாரச் செயலாளர் தங்கமணி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை மாவட்ட செயலாளர் செல்வசாமி தொடங்கி வைத்துப் பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் சிதம்பரகிருஷ்ணன் நிறைவுரை ஆற்றினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.














