எனது வேகமான வளர்ச்சிக்கு காரணமானவர் அஜித்: ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி

0
180

எனது வேகமான வளர்ச்சிக்கு காரணமானவர் அஜித் சார் என்று ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அஜித்துடன் இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சிவா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்தச் சந்திப்பு குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியொன்றில், ”அஜித் சார் பிறந்த நாள் மற்றும் அவரது கார் ரேஸ் அணி வெற்றி இரண்டுக்குமான கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.

எனக்கு ‘தீனா’ படத்தின் மூலம் முதல் வாய்ப்பு வழங்கியவர் அஜித் சார். அதன் மூலமாகவே ஆமிர்கான் உடன் பணிபுரியும் வாய்ப்பு எல்லாம் கிடைத்தது. எனது வேகமான வளர்ச்சி அஜித் சாரால் மட்டுமே நடந்தது” என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். செப்டம்பர் 5-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

’தீனா’ படத்தின் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அப்படத்துக்குப் பிறகு அஜித் – ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் இணைந்து படம் பண்ணவே இல்லை. சில படங்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், அவை அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here