மத்திய பிஜேபி அரசை கண்டித்து குருந்தன்கோடு கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் குருந்தன்கோடு சந்திப்பில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் பொன். பால் துரை தலைமை தாங்கினார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாநில பேச்சாளர்கள் குமரி மகாதேவன், அந்தோணி முத்து, கிழக்கு மாவட்ட தலைவர் கே டி உதயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Home கன்னியாகுமரி செய்திகள் குமரி: மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கண்டன பொதுக்கூட்டம்: விஜய் வசந்த் பங்கேற்பு














