குலசேகரம் அருகே பிணந்தோடு பகுதியில் ஜார்ஜுக்குச் சொந்தமான ரப்பர் உலர் குடோனில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தாலும், சுமார் 4 டன் ரப்பர் சீட்டுகள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














