ஆழ்கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு குமரி மேற்கு கடற்கரைப் பகுதி, கேரள பகுதிகளில் கடந்த மாதம் 1ஆம் தேதி தொடங்கி மீன்பிடித் தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் தடை இன்று வியாழக்கிழமை நிறைவடைகிறது.
இதையடுத்து கேரளா துறைமுகங்களில் தங்குதளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த குளச்சல், தூத்தூர் மண்டல மீனவர்கள் மீண்டும் தொழிலுக்காக நேற்றிரவு கேரளாவுக்குப் புறப்பட்டனர்.













