புதுக்கடை அருகே கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி பிஎட் கல்லூரியில் பட்டமளிப்பு விழா தாளாளர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. முதல்வர் பிரியா வரவேற்றார். 55 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி இஸ்ரோ தலைவர் நாராயணன் சிறப்புரையாற்றினார்.
அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்ரமணிய பிள்ளை கருத்துரை ஆற்றினார். பேராசிரியர் லேகா நன்றி கூறினார். கூட்டாலுமூடு கல்வி நிறுவனங்களின் தலைவர் குமரேசதாஸ், பொருளாளர் முருகன், சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சுனில் குமார் மாணவ, மாணவிகளும் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
            













