நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதியவர் மயங்கி விழுந்து சாவு

0
270

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். அவர் திடீரென மயங்கி அங்கேயே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். முதியவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here