தக்கலை, மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் செல்ல நாடார் மகன் பாலகிருஷ்ணன் (31) ஏசி மெக்கானிக் படித்து வெளிநாட்டில் வேலையில் உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்து புதிதாக வீடு கட்டி, புது மனை புகுவிழா நடத்தியுள்ளார். இந்த நிலையில் அவரை காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த பாலகிருஷ்ணன் நேற்று மதியம் வீட்டு மாடியில் அறையில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














