குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை கால்நடைகளுக்கு 6 சுற்று கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி நடந்துள்ளது. எதிர்வரும் 7வது சுற்றில் சுமார் 58,700 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டிட இலக்கு நிர்ணயித்து கால்நடை பராமரிப்புத்துறை செயல் திட்டம் வகுத்துள்ளது. அடுத்த மாதம் 2ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இந்த பணி நடைபெற உள்ளது.














