கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் கடந்த மே 25-ம் தேதி எம்எஸ்சி எல்சா 3 என்ற கப்பலில் கொண்டு செல்லப்பட்ட கண்டைனர்கள் அரபிக்கடலில் இயந்திர கோளாறு காரணமாக மூழ்கியது. இந்த கப்பலில் சில பொருட்கள் குறிப்பாக பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய மூட்டைகள், மரக்கட்டைகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கியது. தற்போது சின்னவிளை கடற்கரை மணலில் கலந்துள்ள பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியினை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, இன்று (09.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.














